மன்னாரில் தொடர்ச்சியாக மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டு வருகின்றது. மேற்படி மின்சார தடை இரவு நேரங்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால் மன்னார் மாவட்ட மக்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் . நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணி முதல் இன்று மதியம் 02 மணிவரை மின்சாரப் தடைப்பட்டிருந்தது.
இதற்கு என்ன காரணம் என மன்னார் மின்சார சபை தெரிவிக்கவில்லை . தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இரவு நேர மின்சாரத்தடையினால் மன்னார் மாவட்ட மக்கள் பாதுகாப்பு நீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இது மட்டுமன்றி இவ்வருடம் க.பொ.த. சாதரண தரப்பரிட்சை மற்றும் உயர் தரப்பரிச்சை எடுக்கும் மாணவர்களும் பாரிய பிரச்சனைகளுக்கு தற்போது முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்