குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் கருணாவை இலங்கை அரசாங்கம் கைது செய்யவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் என் ஸ்ரீகாந்தா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பிரித்தானியாவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த கருணா, போலியான கடவுச்சீட்டின் மூலமே இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் சட்டத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவேண்டும்.
சட்டம் என்பது அனைவருக்கும் சமன் என்ற அடிப்படையில்,கருணாவுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அவருக்கு மாத்திரம் விசேட முன்னுரிமை வழங்க முடியாது என்றும் என் ஸ்ரீகாந்தா குறிப்பிட்டார்.