இதனையொட்டி நாடுமுழுவதும் முப்படையிரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கரும்புலிகள் தினமாகிய இன்று விடுதலைப் புலிகள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சத்தில் அரசுத் தரப்பினர் இன்றைய தமது நிகழ்ச்சி நிரல்களை வேறுதினங்களிற்கு ஒத்தி வைத்துள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழர் தாயகம் முழுவதும் இன்று கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
வடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகியப் பகுதியில் முப்படையினர் கடும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும்
தெற்கிலும் தலைநகர் கொழும்பு உட்பட்ட பல பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் உஷார்ப்படுத்தப் பட்டிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கரும்புலி தினத்தையொட்டி வன்னிப் பிரதேசத்தில் சிவப்பு,மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு, ஆங்காங்கே கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.