எதிர்வரும் வடமத்திய மாகாண மற்றும் சப்பிரகமூவா மாகாணங்களுக்கான மாகாணசபைத்தேர்தல்களை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1,317 பொது மக்கள் ஊர்வலங்கள,; பொதுக்கூட்டங்களை நடத்த எண்ணியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இரத்தினபுரி, கேகாலை, அனுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த பொது ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்த அந்தக்கட்சி நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், அதேவேளை இவற்றில் நான்கு பெரிய கூட்டங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்துகொள்ளவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பொது ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவை திரட்டுவதுடன் புதிய கட்சி உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளும் திட்டங்களும் எடுக்கப்படவுள்ளன.