07-07-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
எண்ணெய் அகழ்வுக்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் அலரி மாளிகையில் இன்று காலை கைச்சாத்தாகியது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கமும் இந்தியாவின் வரையறுக்கப்பட்ட கேம் தனியார் நிறுவனமும் கைச்சாத்திட்டது.
இலங்கையின் சார்பில் பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியும் இந்திய கேன் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவனத்தின் தலைவர் அஜேய் குப்தாவும் கைச்சாத்திட்டனர்.
மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளமிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள எட்டு வலயங்களுள் ஒரு வலயம் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய கேன் நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த நிறுவனத்துக்கு ~ பீ | வலயமே வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உட்பட அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். |