வவுனியா மாறம்பைக்குளத்தில் தீக்காயங்களுடன் கைககள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலம் அடையாளம் காணப்பட முடியாத வகையில் முகம் தீயினால் சுட்டெரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீதியோரத்தில் வீசப்பட்டு கிடந்த இந்தச் சடலத்தை பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்;. விசாரணைகள் நடைபெறுகின்றன.