08-07-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
அகலக்கால் பதிக்கின்ற இராணுவத்திற்கு நாம் உரியகாலத்தில் தக்கபாடம் புகட்டுவோம் என கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம்
கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் கரும்புலிகள் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இந்த கரும்புலிகள் நாள் எமக்காக மட்டுமல்ல எம்மோடு மோதிக்கொண்டிருக்கின்ற சிறிலங்கா இராணுவமும் இந்த நாளை அச்ச உணர்வுடன் நினைவு கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் எங்கு குண்டு வெடிக்குமோ, எங்கு கரும்புலி பாயுமோ என்ற அச்சத்துடன் தான் சிங்கள தேசம் இந்த கரும்புலிகள் நாளை கடைப்பிடிக்கிறது.
அந்தவகையில் இந்த இரண்டு தசாப்த காலத்தில் தமிழர் போராட்டத்தை வலுப்படுத்தி எம்மை உயரவைத்து எம் போராட்டத்தை வீச்சாக்கி தேசியத்தலைவரின் வழிநடத்தலுக்கு செயல்வடிவம் தந்தவர்கள் கரும்புலிகள். விடுதலைப் போராட்டத்தின் இறுக்கமான இக்கட்டான காலகட்டங்களில் ஏற்பட்ட தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து எமது போராட்டத்தை முழுவீச்சுடன் இயக்கியவர்கள் இந்தக் கரும்புலிகள்.
எமது விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை வரலாறுகள் பல கரும்புலிகளாலேயே எழுதப்பட்டிருக்கின்றன. நாம் பலமாக இருக்கும் போது தான் எல்லோரும் எங்களிடம் வருகிறார்கள். அந்தப் பலத்தை எமது போராட்டத்திற்கு கொடுத்து எம்மை தலைநிமிர வைத்தவர்களாக இந்தக் கரும்புலிகள் இருக்கிறார்கள்.
கரும்புலிகள் என்றால் சதாரண குண்டைக் கட்டிக்கொண்டு வெடித்துவிடுவதில்லை. ஒரு கரும்புலி உருவாகுவதற்கு பின்னால் நீண்ட வரலாறு இருக்கும். ஒரு கரும்புலி போய் வெடிப்பதற்கு முன்னர் அவரின் எண்ணங்கள் இத்தேசத்தின் விடிவு குறித்தும், தன் தியாகத்தால் இப்போராட்டம் முன்நோக்கி நகரும் என்ற நம்பிக்கையுடனும் தான் இருக்கும்.
இப்படிப்பட்ட உயரிய தியாகத்தால் நகருகின்ற இந்த விடுதலைப் போராட்டத்தை எமது தலைவரைத் தவிர எவராலும் அளவிடமுடியாது. நான்காம்கட்ட ஈழப்போர் தொடங்கிவிட்டது. எதிரி எல்லாப்பக்கமும் வருகிறான். விமானங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்றன. மகிந்த அரசுக்கு உலக நாடுகள் பல ஆலோசனைகளைக் கூறிக்கொண்டு இருப்பதுடன் எமது விடுதலைப் போராட்டம் வெல்லுமா? தோற்குமா? என அவை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றன.
எமது விடுதலைப் போராட்டத்தை மகிந்த அரசு வழிகொண்டு அடக்கிவிட்டால் அதனை மகிழ்சிசயாக ஏற்றுக்கொள்ள உலகம் தயாராக இருக்கிறது. உலக நாடுகளின் உற்சாகமூட்டலுடன் நான்கு பக்கத்தாலும் போரை திருப்பிவிட்டது மகிந்த அரசு. ஆனால் இன்று நடப்பது என்ன? ஒரு பகுதியைத்தானும் இராணுவம் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது திணறுகிறது.
நிச்சயமாக நாங்கள் வெல்லுவோம். எமது தலைமை தெளிவாக இருக்கிறது. தலைவருக்கு கீழே தளபதிகள் தெளிவாக இருக்கிறார்கள். தளபதிகளுக்கு கீழே எமது படைகள் தெளிவாக இருக்கிறது.
அகலக் கால்பதிக்கின்ற இராணுவத்திற்கு நாம் உரிய காலத்தில் தக்கபாடம் புகட்டுவோம். அது கடலாக இருக்கலாம், தரையாக இருக்கலாம், வானாக இருக்கலாம். எந்தப் போர்முனையாக இருக்கலாம்.
அநுராதபுரத்திலே தலைவர் யாருக்கும் தெரியாமல் 21 கரும்புலிகளை அனுப்பி பகைவனின் வான்கலங்களை அழித்த அற்புத நிகழ்வு பகைவனுக்கு ஓர் எச்சரிக்கை. நாயாற்றுக் கடற்பரப்பிலே தனது டோறாப் படகிற்கு என்ன நடந்தது? என இன்னும் தெரியாமல் சிங்களக் கடற்படை குழம்பிநிற்கிறது. நாம் அடுத்த நாளே சொல்லிவிட்டோம் கரும்புலித் தாக்குதல் மூலம் டோறா மூழ்கடிக்கப்பட்டது என. அத்தோடு விடவில்லை. திருமலை துறைமுகத்தில் பகைவனின் கப்பல் ஒன்றை நீருக்கு கீழால் சென்று எமது கரும்புலிகள் உடைத்தெறிந்திருக்கிறார்கள். அது கூட இன்றும் சிறிலங்காவுக்கு புரியாத புதிராக இருக்கிறது. இப்படிப்பட்ட உயரிய தியாகிகள் நாளான இன்றைய கரும்புலிகள் நாளிலே அனைவரும் உறுதி எடுத்து தலைவரின் பாதையில் பூகம்பப் புயலாக எழுவோம் என்றார்.
|