08-07-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்க,படும்!ஜப்பான்-ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு அறிக்கை இலங்கை இனபிரச்சினை தீர்வுக்கு, அரசியல் அணுகுமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும், அங்குள்ள மனித உரிமை நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.டோக்கியோவில் கடந்தவாரம் நடைபெற்ற ஜப்பான்-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டு முடிபில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கபட்டுள்ளது.பூ€ஞூ இலங்கையின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த மார்ச்சில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மற்றும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஊடாக இலங்கை இனபிரச்சனைக்கு முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் தீர்வு முயற்சிகளை வரவேற்கிறோம் என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இதேவேளை இலங்கை அரசு தனது முயற்சிகளை மேலும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமானது எனவும் ஜப்பான் -ஐரோப்பிய ஒன்றிய கூட்டு அறிக்கை வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த மகாநாட்டில் ஜப்பானிய பிரதமர் ஜசூவோ பக்கூடா, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.
|