08-07-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எதிர்காலப் பேச்சுவார்த்தை; தமிழீழ விடுதலைப்புலிகளுடன் ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணைந்தே நடத்தப்படும் என அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.
நோர்வே நாட்டின் பிரசன்னமில்லாமல் அரசாங்கத்துடன் மாத்திரம் பேச்சுவார்த்தையை நடத்த முடியாது எனத் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அனைத்துத் தமிழ்த் தரப்புக்களுடன் பேச்சு என்ற அரசாங்கத்தின் தகவலானது, பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதற்கான ஒரு உத்தியே என்றும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து நோர்வேத் தரப்பினரைக் கிளிநொச்சிக்கு அனுப்ப முடியாது என அரசாங்கம் கூறுவது தொடர்பாகக் கருத்துரைத்துள்ள இளந்திரையன், ஐக்கிய நாடுகள் சபையினர் தினந்தோறும் கிளிநொச்சிக்கு வந்து செல்லும்போது நோர்வேத் தரப்பினருக்குக் கிளிநொச்சியில் பாதுகாப்பில்லை என அரசாங்கம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என மேலும் தெரிவித்துள்ளார்.
|