திருகோமலையில் கடந்த 4ஆம் நாளன்று சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் இன்று காலை உடலமாக மீட்கப்பட்டார்.
திருகோணமலை - கண்டி வீதியிலுள்ள அன்புவழிபுரத்தில் உடலமாக மீட்கப்பட்டவர் 20 அகவையுடைய தேவுதா கிறிஸ்ரோபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வேறு இடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவரது உடலம் அன்புவழிபுரத்திற்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டு போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
திருகோணமலை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட உடலம் உடல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
உடலமாக மீட்கப்பட்ட கிறிஸ்ரோபர் கடந்த 4ஆம் நாளன்று கடத்தப்பட்ட மறுகணமே அவரது தயார் உப்புவெளி சிறீலங்கா காவல் நிலையத்தில் கடத்தல் பற்றி முறையிட்டிருந்தார்.