அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுவதற்கு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என ஜேவிவியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கோல்பேஸ்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சோவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பில் 13வது சரத்தை உயிரூட்டுவதற்கு மகிந்த அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. மகிந்தவின் சிந்தனை பிரச்சாரங்களின் போது 13வது திருத்தம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
13வது சரத்து திருத்தத்தை ஜக்கிய தேசியக் கட்சி வலுக் கட்டாயமாக நிறைவேற்றியது. இதன் பின்னணியில் இந்தியாவின் பக்கத்துணை காணப்படுகின்றது.
13வது சரத்துக்கு உயிரூட்டுவது தமிழ்,முஸ்லிம்,மற்றும் வடக்கு,கிழக்கு சிங்கள மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. அதனால் நன்மையும் கிடைக்கப்போறதில்லை.
நாட்டின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடித்து, சனநாயக ரீதியில் நாட்டில் சமவுரிமை அடிப்படையில் வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என சோவமன்ச மேலும் தெரிவித்துள்ளார்.