சிறீலங்கா அரசு இன்றிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிவாயுவின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது.
இதற்கிணங்க பன்னிரண்டரை கிலோ எடையுள்ள எரிவாயு கொள்கலன் 1,749 ரூபாவாக (261 ரூபாவால்) விலையுயர்த்தப்பட்டுள்ளது. 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு கொள்கலன் 322ரூபாவாக (48 ரூபாவால்) விலையுயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரக் கட்டணமும் விலையுயர்த்தப்பட்ட இருப்பதாக சிறீலங்கா அரசு அண்மைக் காலமாக கூறிவரும் நிலையில், ஜே.வி.பி உட்பட பல கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் போருக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லுவதாக பொருளியல் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.