மட்டக்களப்பு, ஏறாவூர், தளவாய் காட்டுப்பகுதியில் 25 தமிழ் இளைஞர்கள் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தளவாய், ஐயங்கேணி கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களே படையினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டு, இன்று காலை ஏறாவூர் சிறீலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கத்திகள், சிறயரக கம்பிகள் சகிதம் காட்டுக்குள் வேட்டைக்குச் சென்றபோதே இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.