மன்னார் பாப்பாமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
பாப்பாமோட்டை, சேற்றுக்களம் ஆகிய பகுதிகளின் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:00 மணிவரை செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியவாறு முன்னேறிய படையினரை வழிமறித்து விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் படையினர் பெரும் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடினர்.
இதில் பொறிவெடி, மிதிவெடிகளில் சிக்கி மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மன்னார் மடு பண்டிவிரிச்சான் பகுதியில் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.