மஹிந்த சிந்தனைக் கொள்கையில் அறிவிக்கப்பட்ட ~சுபிட்சமான கிராமம்| எனும் திட்டத்தின் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை வீடமைப்பு அமைச்சு மற்றும் தேச நிர்மாண அமைச்சு ஆகியன கூட்டாக அமுல்படுத்தவுள்ளதாக வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
இதன்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுவசதிகளையும் கொண்ட முன்னணி மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. இத்தகைய கிராமங்களை அமைப்பதற்கு பொருத்தமான கிராமங்களை இனங்காணும் நடவடிக்கையை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.