யாழ் நகரில் மீன்வர்த்தகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் நகரில் ‘பிஸப்வீட்டு’க்கு முன்பாக வைத்தே ஆயுததாரிகள் இவரை கடத்திச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரை பொலிஸாரே கைதுசெய்து கொண்டுசென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தபோதும் இவரை தாம் கைதுசெய்யவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ஏ9 பாதை மூடப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து தமது செந்த வாகனத்தில் கொழும்புக்கு மீன் அனுப்பி வர்த்தகம் செய்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கொழும்பில் இருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமையே யாழ்ப்பாணம் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.