மனித உரிமைகள் கண்காணிப்பு அலு வலகம் ஒன்றை இலங்கையில் நிறுவுமாறு பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் மெலொட் பிரவுண் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு அடியோடு நிராகரித்து விட்டது.
இலங்கையில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த மனித உரிமைகள் கண்காணிப்பு அலுவலகம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் லூவிஸ் ஆர்பர் அம்மையார் சிபார்சு செய்திருப்பது தெரிந்ததே.இதனை நடைமுறைப்படுத்தும் படியே பிரிட்டிஷ் அமைச்சர் கோரியிருந்தார்.
புலிகளுடன் தொடர்புடைய பிரித்தானிய தமிழர் சபை மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. ஆகியோருடன் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்திய பின்னரே மனித உரிமைகள் கண்காணிப்பு அலுவலகத்தை நிறுவும் கோரிக்கை விடப்பட்டது என்றும்
இலங்கை இன்றும் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள நாடு அல்ல என் றும் இலங்கையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சர்வதேச சட்டங்களுக்கு இணங்க இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படுமாறும் தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கு உதவுமாறும் பிரிட்டிஷ் அமைச்சருடனான சந்திப்பின் போது பிரித்தானிய தமிழர் சபை கோரியிருந்தது.