உலகிலேயே தாக்கவரும் எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கையாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது: உலகிலேயே பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக கொடுத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிடும் ஒரே நாடு இலங்கையாகும்.
எம்மீது தாக்குதல் நடத்தி நாட்டின் உறுதியையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் நோக்குடன் செயற்படும் பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கமே இலவசதிமாக வழங்குகிறது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்கள் யார்? போரின் போது இராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த பயங்கரவாதிகளே அங்கு சிகிச்சை பெறுகின்றனர். அரசாங்கத்தின் மருத்துவ வசதியில் சுகமடைந்து மீண்டும் அவர்கள் நமது இராணுவத்தை தாக்குவதற்கு போர்களத்துக்கு வருகின்றனர்.