சிறிலங்கா தலைநகர் கொழும்பு மோதரையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த சிறிலங்கா பொலிஸார் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
மோதரையில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த நான்கு பொலிஸார் உள்ளிட்ட ஏழு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் பொலிஸைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.