01-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
கொழும்பு முகத்துவாரம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தற்கொலை அங்கிகள்,கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது அப்பகுதியில் படையினர் தேடுதலில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இவ்வெடி பொருட்கள் தொடர்பான புலனாய்வுத்தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைவிடப்பட்ட வளவுப்பகுதியில் இருந்தே இந்த வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி தற்கொலை குண்டுத்தாக்குதல் அங்கி-03,கிளேமோர் குண்டுகள் -06,கைக்குண்டுகள்-04,மற்றும் சீ4 ரக வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
|