02-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 135 பேர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடத்தல்கள் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு ,பொலிஸ் நிலையங்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கும் அறிவித்தும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று சனிக்கிழமை திருகோணமலை மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கந்தையா கிருபைராஜா கடத்தப்பட்டோர் உறவினாகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போதே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன. கடும் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளிலேயே கூடுதலான கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் வெள்ளைவானில் வரும் ஆயுததாரிகள் படையினருக்கு முன்பாகவே கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்தும் இங்கு கடத்தப்பட்டவர்களின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடத்தல்கள் குறித்து பொலிஸாரினால் போதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையென தெரிவத்த கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும்
|