மன்னார் கோவில்மோட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கி படைத்தரப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை 9 மணியளவில் விடுதலைப்புலிகளின் பகுதியில் ஊடுருவ முயன்ற படையினரே இவ்வாறு பொறிவெடியில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்தபோதும் பின்னர் ஒருவர் உயிரிழந்ததாக படையினர் தெரிவித்தனர்.
இதேநேரம் மன்னார்,முகமாலை ,மணலாறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மோதல் நடவடிக்கையின்போது 25க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.