02-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு சவால் விடும் பொருட்டு கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு சவால் விடும் பொருட்டு கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைப்பதற்கு ஐ.தே.க. திட்டமிட்டு வருகின்றது. இது தொடர்பில் நாம் ஏனைய எதிர்த்தரப்பு கட்சிகளுடன் பேச்சக்களில் ஈடுபட்டு வருகின்றோம். அரசியல் யாப்பு சபையினை கலந்தாலோசிக்காது அரச தலைவர் மேற்கொள்ளும் நியமனங்கள் சட்டவிரேதமானவை. எனவே அந்த நியமனங்கள் தொடர்பாக நாம் நடவடிக்கை எடுக்க உள்ளோம். நாம் அரச தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டாலும், உயர் நீதிமன்றத்தின் மூலம் அந்த நியமனங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். சட்டபூர்வமாக நியமனம் பெறாத அந்த அதிகாரிகளுக்கு அந்த பதவிகளுக்குரிய கதிரைகளில் அமர்வதற்கு உரிமை கிடையாது. அரசியல் யாப்பு தெரிவுக்குழு இயங்கும் போது அரசியல் யாப்பு சபையினால் நியமனங்களை வழங்க முடியாது என அரசு கூறுமானால் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக அரசியல் யாப்பு தெரிவுக்குழு ஆராய்ந்து வருகையில் எவ்வாறு கிழக்கில் உள்ளுராட்சி சபை தேர்தலை அரசு நடத்த முடியும் என்றார் அவர்.
|