மோதல்களில் கொல்லப்பட்ட 8 விடுதலைப்புலிகளின் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக விடுதலைப்புலிகளிடம் கையளித்துள்ளதாக பாதுகாப்பு தொடர்பான தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மணலாறு பகுதியில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உடலங்கள் 7 அனுராதபுரம் வைத்தியசாலையில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று வவுனியா கல்மடு பிரதேசத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண் விடுதலைப்புலி உறுப்பினரின் உடலத்தை வவுனியா வைத்தியசாலையில் வைத்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இச்சடலஙடகள் வன்;னியில் வைத்து விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.