தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் பெளத்த பிக்குவால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.பெளத்த பிக்குவால் தாக்கப்பட்டவர் மாத்தறை மாவட்ட செய்தியாளரான பஞ்கஜ சங்கல்பவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முறைப்பாடு சிறீலங்கா காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மாத்தறையில் அமைந்துள்ள அனுல வித்தியாலயத்தின் கலை நிகழ்வு ஒன்றில் மங்கள விளக்கை ஏற்றுவதற்காக அழைக்கப்பட்ட மாத்தறை மஹாமன்திந்த விகாரையின் விகாராபதிபதி சிறீதம்மகித்தி தேரரே ஊடவியலாளரைத் கடுமையாகத் தாக்கியும், கடும் வார்த்தைப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளார்.
அனுல வித்தியாலயத்தின் அழைப்பின் பெயரில் பங்கஜ சங்கல்பவை விழாவில் கலந்துகொண்டார். விகாராதிபதி சிறீதம்மகித்தி தேரர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவி ஒருவர் மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்டுள்ளார்.இத்தச் செய்தியை ஊடகங்களுக்கு குறித்த தொலைக்காட்சி ஊடகவியலாளர் செய்திகளை வெளியிட்ட காழ்ப்புணர்வே இச்சம்பவத்திற்கு காணரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.