02-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
சிறிலங்கா அரசாங்கத்திற்கான படைத்துறை உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பின்னடித்து வருகையில் பெருமளவான உதவிகளை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளதாக ரஷ்ய தூதரகத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவில் மோசடைந்து வரும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து படைத்துறை உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பின்னடித்து வருகையில் ரஷ்யா உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. சிறிலங்காப் படையினருக்கு தேவையான ஆயுதத் தளபாடங்களுக்கான கடன் தொகையாக 500 மில்லியன் டொலர்களை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது தொடர்பான பேச்சுக்களில் ரஷ்ய அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளனர். சிறிலங்காப் படையினருக்கான வழங்கல், ஆயுதக் கொள்வனவு, ஆயுதப் பரிசோதனைகள் போன்றன தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றனர். இந்த உடன்பாடு தொடர்பாக ஆராய்வதற்கு ரஷ்யாவில் இருந்து அதிகாரிகள் குழு ஒன்று ஜனவரி மாதம் சிறிலங்காவிற்கு வந்திருந்தாகவும் அவை தெரிவித்துள்ளன. இதனிடையே காங்கிரஸ் சபையின் தீர்மானத்தை தொடர்ந்து அமெரிக்கா சிறிலங்காவிற்கு அழிவைத்தரும் ஆயுதங்களை விநியோகிப்பதனை நிறுத்தியிருந்தது. தற்போது அது புலனாய்வுத் தகவல்களை மட்டுமே சிறிலங்காவிற்கு வழங்கி வருகின்றது எனவும், சிறிலங்காவிற்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
|