இலங்கை மத்திய வங்கி இவ்வருடம் சுமார் 41.7 பில்லியன் ரூபா நாணயத் தாள்களை புதிதாக அச்சிட்டு பாவனைக்கு விடவுள்ளது. கடந்த வருடம் மத்திய வங்கி பொருளாதாரத்திற்கென 24.6 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது.
கடந்த வருடம் 27.7 பில்லியன் ரூபாவுக்கான நாணையத் தாள்களை அச்சிட திட்டமிடப்பட்டிருந்த போதும் குறைவாகவே அச்சிடப்படிருந்தது.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 16.9 பில்லியன் ரூபா நாணயத் தாள்களை புதிதாக அச்சிட்டு வெளியிடுவதற்கு மத்திய வங்கி திட்டமிட்டிருந்தது.
புதிதாக அச்சிடும் பணத்தை குறிப்பிட்ட இலக்க மட்டத்திற்கு அதிகமாகச் சென்று விடாதவாறு நடைமுறைப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது.