02-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
திருகோணமலை -ஹபரண பிரதான வீதியில் உள்ள் ஹர்த்தராஸ் கொட்டு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமையே விடுதலைப்புலிகளின் சீருடையொன்றும் துப்பாக்கியொன்றும் வைத்திருந்த கடற்படையை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர் மூதூர் கிழக்கு சம்பூரில் இருந்து அல்லைவழியாக சென்றபோது ஹர்த்தராஸ் கொட்டுவையில் உள்ள காவலரணில் இவர் சோதனைசெய்யப்பட்டபோதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக திருகோணமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் சித்சிறி தயானந்த தெரிவித்தார். பாதுகாப்பு படையில் உள்ளோரை சோதனை செய்வது குறைவாயினும் குறித்த தினமன்று அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டபோதே இவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இவர் ஹபரண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் சித்சிறி தயானந்த மேலும் தெரிவித்தார்.
|