சுகவீனமடைந்த பூரண ஓய்விலிருக்கும் முன்னாள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவர் கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
உயிராபத்தை உதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளே நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஜனவரி முதல் பகுதியில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அனுரா பண்டாரநாயக்க பின்னர் ஓரளவு குணமடைந்த நிலையில் கொழும்பு திரும்பியிருந்தார்;. கொழும்பில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் பூரண ஓய்விலிருக்குமாறு அநுரா அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
கடந்தமாத நடுப்பகுதியில் தன்னுடைய 59 வது பிறந்தநாளைக் கொண்டாடிய அநுரா பண்டாரநாயக்கவை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாகத் தெரிவித்தார். ஆத்துடன் அநுரா பண்டரநாயக்க குணமடைந்த பின்னர் அவர் விரும்பும் எந்தவொரு அமைச்சர் பதவியையும் வழங்க தான் தயாராகவிருப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
தேசிய மரபுரிமைகள் அமைச்சர் பதவியை வகித்துவந்த அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க, கடந்த டிசெம்பர் மாதம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கம் கவிழும் என்ற எதிர்பார்ப்பில் அமைச்சர் பதவியைத் துறந்து எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவினார். இருந்தபோதிலும் இறுதி நேரத்தில் ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டைம hற்றிக்கொண்டமையால் அரசாங்கம் தப்பிக்கொண்டமை தெரிந்ததே.