கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து இரண்டு தமிழர்களின் பணம் மற்றும் உடமைகள் சூறையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் இராதா கிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை வவுனியாவில் இருந்து கொழும்பு வந்த செல்லையா வேதமுத்து அவரின் உறவினரான இராமநாதன் மதிவண்ணன் ஆகியோரின் சொத்துகளே இவ்வாறு சூறையாடப்பட்டுள்ளதாக அவர்கள் பிரதியமைச்சர் இராதா கிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.
ரயில் நிலையத்தில் சிவிலுடையில் நின்ற மூவர் இவர்களிம் தங்களை இரகசிய பொலிஸார் எனக்கூறி தனித்தனியாக அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இவர்களிட் உள்ள உடைமைகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் எனக்கூறி இவர்களிடம் இருந்த நகை மற்றும் 21000ரூபா பணம் ,கையடக்க தொலைபேசி,அடையாள அட்டை போன்றவற்றை அபகரித்துச்சென்றுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி டாம் வீதியில் ருந்து உறவினர் இளைஞர் ஒருவரால் கூட்டிச்செல்லப்பட்டபோது காணாமல்போனதாக கூறப்பட்டு பின்னர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதாக கூறப்பட்ட தாயும் மகளையும் பார்க்க வவுனியாவில் இருந்து கொழும்புக்கு வந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செல்லையா வேதமுத்து முரசுக்கு தெரிவித்தார்.
இதேநேரம் தாயும் மகளை கூட்டிச்சென்றதாக கூறப்படும் உதயன் என்பவர் ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.