மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று முற்பகல் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
படையினர் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தி படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.
பலத்த இழப்புக்களுடன் படையினர் அவர்களின் நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
மண்கிண்டிமலைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு செறிவான சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இத்தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் இன்று மாலை 6:00 மணிவரை நீடித்தது.
மாலை 6:00 மணிக்கு படையினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கினர்.
இதில் படையினர் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
இம் முறியடிப்புத் தாக்குதலில்
பிகே ரவை இணைப்பிகள் மற்றும் பிகே ரவைகள் 1,000
ஏகே ரவைகள் - 100
ஆர்பிஜி எறிகணை - 01
குண்டுகள் - 03
ரவைத்தடுப்பு அணி - 01
ஏகே ரவைக்கூடுகள் - 02
மிதிவெடி அகற்றிமுள் - 01
ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.