தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலையடுத்து மன்னார் இத்திக்கண்டல் நோக்கி நகர்ந்த சிறிலங்காப் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர்.
மன்னார் பாலைக்குழிப் பகுதியிலிருந்து இத்திக்கண்டல் பகுதி நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணிமுதல் சிறிலங்காப் படையினர் நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர்.
மிகச்செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இந்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தினர்.
சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இச்செறிவான எறிகணைத் தாக்குதலையடுத்து படையினர் பலத்த இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கி ஓடிவிட்டனர்.
இத்தாக்குதலின் போது படையினரிடமிருந்து படைக்கலங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.