|
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது:
13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ரணிலும், மகிந்தவும் இணக்கம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரது சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தது இந்தியத் தூதுவர்தான்.
வடக்கு-கிழக்கு பிரதேச சபைத் தேர்தல்களின் மூலம் தனது உளவு அமைப்பான "றோ"வின் முகவர்களையே நியமிக்க இந்தியா அப்பகுதிகளில் நியமிக்க விரும்புகிறது. வடக்கில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெற்றதற்கு துரோகம் இழைப்பதாகும் இது.
சில வாரங்களுக்கு முன்னர் ரணிலை இந்தியா அழைத்திருந்தது. அதன் பின்னரே இச்சந்திப்பு நடைபெற்றது.
இப்பிராந்தியத்தில் தனது பொருளாதார அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா இத்தகைய தலையீட்டை மேற்கொள்கிறது. இது தவறானது.
சிறிலங்காவில் சீனாவின் பல திட்டங்களுக்கு இந்தியா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. சிறிலங்காவில் மேலும் 100 புதிய எண்ணெய் நிரப்பு நிலையங்களை அமைக்க இந்திய எண்ணெய்க் கழகம் அனுமதி கோரி வருகிறது. நாங்கள் இந்தியாவை மதிக்கிறோம். இருப்பினும் இரு நாடுகளும் தனிநாடுகளே. ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டினது இறைமை மற்றும் பிரதேச ஒற்றுமைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
தற்போது நமது நட்பு நாடான இந்தியா எமது இறைமைக்கு ஊறு விளைவிக்கிறது. ஆகையால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் கிளர்ந்தெழ வேண்டும்.
இந்தப் பிரச்சினையானது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர்களையோ அரசியல் தலைமைகளையோ மாற்றுவதனால் அல்ல. இந்தியா அதிகார வர்க்கத்தின் கடும்போக்குக் கொள்கையே இதற்குக் காரணம். இதனையே இந்திய தூதுவர்களிடத்தினான சந்திப்பின் போதும் நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம் என்றார் அவர். |