விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிக்கும் தொண்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டுமென பிரித்தானிய அரசாங்கத்தை இலங்கைகோரியுள்ளது. புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்துள்ள பிரித்தானியா, அவ்வமைப்புக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடும் அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டுமென லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பில லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றன. இந்த நிதி அரசாங்கத்துக்கு எதிரான போர் மற்றம் மக்கள் மீதான வன்முறைகளும் பயன்படுத்தப்படுகின்றது.
இதேவேளை, தமிழ் அமைப்பினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்ச்சி தொடர்பாக பிரித்தானியா அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.
இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் திரட்டப்படும் நிதி கடைசியில் விடுதலைப் புலிகளின் வலையமைப்பை சென்றடைகின்றன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதனை தடை செய்துள்ள பிரித்தானிய அரசாங்கம், பல்வேறு அமைப்புக்களின் பெயரில் புலிகளுக்கு நிதிதிரட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம்.
“அதேவேளை இக்குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள தமிழ் இளையோர் அமைப்பு உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இளம் தமிழ் சமுதாயத்துக்கு உதவுவதே எமது நோக்கமாகும்.
சந்தேகத்திற்காக தேசிய ரீதியில் தமிழ் அமைப்புக்களை ஒருங்கணைந்து செயற்பட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளது.