ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
மன்னார் மாவட்டத்துக்கான அனைத்து போக்குவரத்துகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினரால் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் பிற்பகல் 12 வரையிலான நான்கு மணித்தியாலங்கள் இந்த பயண கட்டுப்பாட்டை படையினர் விதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாவட்டத்தில் இருந்து மன்னாருக்கும் வாகனங்கள் செல்ல படையினர் அனுமதிக்கவில்லை. எனினும் என்ன காரணத்துக்காக போக்குவரத்துகள் இடை நிறுத்தப்பட்டன என்பது தொடர்பில் படையினர் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை.