சிறுபான்மையினமான ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கமோ அல்லது நிரந்தர அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை வைக்கும் நோக்கம் சிறீலங்கா அரசுக்கு கிடையாது என ஜயம்பதி விக்கிரமரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். சிறீலங்கா அனைத்துக் கட்சிக் குழுவின் அரசியல் அமைப்பு ஆலோசகர் ஜயம்பதி விக்கிரமரட்ன அவர்கள் மேற்கண்ட குற்றச்சாட்டை தெரிவித்திருப்பதோடு, தனது பதிவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது நடைமுறையிலிருக்கும் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட தீர்வையே சிறீலங்கா அரசு வைக்க முற்படுவதாகவும் அவர் மேலும் சிறீலங்கா அரசைத் தரப்பு மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
13வது திருத்த அமர்வில் உள்ளடக்கப்பட்டிருக்கும் மாகாணசபை அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தி;ற்கு மேலதிகமாக செயற்பட சிறீலங்கா செயற்பட மறுப்பதால், தம்மால் சுதந்திரமாக செயற்பட முடியாதிருப்பதாகவும் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
13வது திருத்த அமர்வை தமிழீழ விடுதலைப் புலிகளை தவிர, ஏனைய இராணுவ துணைப்படைத் தலைமைகள் கூட ஏற்கத் தயாரில்லை. 13வது திருத்த அமர்வு எவ்வகையிலும் தமிழர்களுடைய உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப்போவதில்லை.
அந்தவகையில் சனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்;டு அனைத்துக்கட்சிக்; குழு செயற்படுவதாக விக்கிரமரட்ன மேலும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.