இலங்கையின் கிழக்கு கடற்கரயில் 150 கடல் மைல் தொலைவில் கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றின் நடமாட்டத்தினை அவதானித்துள்ளனர்.இதனையடுத்து கடற்படையின் இக்கப்பலை கடற்படையினர் கிழக்கு கடற்கரை பரப்பிற்கு கொண்டுவந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன.
இக்கப்பலில் இருந்து 71 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.இக்கப்பல் ஆட்கடத்தலிற்கோ அல்லது ஆயுதகடத்தலிற்கோ பயன்படுத்தப்படுகிறதா என்பதனை அறிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அதேவேளை இக் ரோலர் படகில் பர்மா மற்றும் பங்களாதேஷை சேர்ந்த 91 பேர் பயணித்ததாகவும் இவர்களுள் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.