தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டாம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தில் 13 ஆவது திருத் தத்தின் கீழ் தீர்வு ஒன்றை விரைவில் வழங்கவுள்ளது.
வட அயர்லாந்தின் சின்பெயின் அமைப்பின் தலைவர் ஜெரி அடம்ஸை நேரில் சந்தித்த இலங்கை அரசாங்கத் தூதுக் குழு மேற்கண்டவாறு கேட்டுள்ளது.
இக்குழு நேற்று வட அயர்லாந்துக்கு விஜயம் செய்தது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங் குவதை நிறுத்துவதோடு அவர்களுட னான தொடர்புகளையும் நிறுத்தவேண் டும் என்றும் அரசாங்கத் தூதுக்குழு அடம் ஸிடம் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார, பிரதிநிதி அமைச்சர் மகிந்தானந்த அளுத் கமகே, ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.மஹ்ரூப் ஆகியோர் கொண்ட குழு பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. அந்தக் குழுவே நேற்று வடஅயர்லாந்து சென்று ஜெரி அடம்ஸைச் சந்தித்தது.
விடுதலைப் புலிகள் அமைப்புப் பயங்கர வாத அமைப்பு. அந்த அமைப்புக்கு வழங்கும் ஆதரவை மீளப் பெறுங்கள் இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகள் யாவும் பூர்த்தி செய்யப்படும் இலங்கை அரசுக்கு எதிராக விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புக்கள் மேற்கொள்ளும் பிரசாரங்கள் அர்த்தமற்றவை. தேவையற்ற வகையில் மேற்கொள்ளும் அந்தப் பிரசாரங்களை சர்வதேசம் கவனத்தில் எடுக்கக்கூடாது.
விடுதலைப் புலிகளுடனான தொடர்பு களை உடன் நிறுத்தி இலங்கை அரசு மேற்கொள்ளும் அரசியல் தீர்வுச் செயற்பாடுகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அக் குழு கோரிக்கை விடுத்தது.
சின்பெயின் அமைப்பின் தலைவர் ஜெரி அடம்ஸ் கடந்த டிசெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.