மன்னார் விடத்தல் தீவு விடுவிக்கப்படாத பகுதிகளில் இருந்து இன்று காலை இரு சிறுவர்கள் உட்பட 10 பேர் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மன்னார் எருக்கம்பிட்டி பொலிஸ் சாவடியில் சரணடந்துள்ளனர்.
சரணடைந்தவர்களுள் 5 ஆண்களு, 3 பெண்களும்.ஒரு சிறுவனும்.ஒரு சிறுமியும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்கள் 150,000 படகொன்றிற்கு செலுத்தி பயணித்துள்ளனர்.பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த பொதுமக்கள் தற்போது மன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.