யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவர் கடந்த 28ஆம் திகதி முதல் காணமல்போயுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த க.சசிகரன் என்ற மாணவனே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கியிருந்த மேற்படி மாணவன் கடந்த 28 ஆம் திகதி பொருட்கள் வாங்குவற்கு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
சில நாட்களாக அமைதியாக இருந்த யாழ்குடாவை மீளவும் பீதிக்குள்ளாக்கவே இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எமது மாணவன் கடத்தப்பட்டோ அல்லது கைதுசெய்யப்பட்டோ இருக்கலாம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறி;க்கையில் தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறி;க்கையில் மேலும் தெரிவித்துள்ளதாகவது:
அவரை தடுத்து வைத்துள்ள எவராயினும் அவரை விடுவித்து எமது கல்வி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது மாணவர்கள் கல்விச்செயற்பாடுகளிலும் பரீட்சைகளிலும் தமது கவனத்தை செலுத்திவரும் வேளையில் இவ்வாறான சம்பவங்கள் அதற்கு இடையூராக அமைந்துவடும்.
எனவே,அவரை விடுவித்து கல்விச்செயற்பாடுகளுக்கு பூரணஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகின்ற அதேவேளை, இக்கோரிக்கையை செவிசாய்த்து பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களென மனப்பூர்வமாக நமபுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.