கிழக்கில் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் தாம் மாகாணசபை தேர்தலில் போட்டியிடமாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணசபை தேர்தலை மே மாதம் நடத்துவதற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு உள்ளுராட்சிசபை தேர்தல் முடிந்த கையோடு கிழக்கு மாகாணசபை தேர்தலையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இம்மாத இறுதியில் கோரப்படவுள்ளதாகவும் மே மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து அரசாங்கம் தேர்தல் திணைக்களத்துடன் தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இது குறித்து அமைச்சர்கள் சிலருடன் முக்கிய பேச்சு நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்ததகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சி மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது.