மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முஸ்லிம் யுவதியொருவர் ஊர்காவல் படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ள சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பதற்ற நிலையேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10.0 மணியளவில் ஓட்டமாவடி மாவடிவேம்பு பிரதேசத்திலே இச்சம்பவம் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்