திருகோணமலை மாவட்டம் ஜின்னா நகர் பிரதேசத்தில் வைத்து சமுர்த்தி வங்கியின் துணை முகாமையாளர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளைவானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முறபகல் 11 மணியளவில் ஜின்னா நகரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளைவானில் வந்த சுமார் ஆறு பேர் அடங்கி ஆயுதக்குழுவினர் இவரை கடத்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் வசித்துவரும் கிருபாகரன்(36வயது) என்பரே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமுர்த்திவங்கியின் ஊழியர்கள் இதனை தடுக்க முற்பட்டபோதும் அவர்களை ஆயுதமுனையில் வைத்துவிட்டு பலரின் முன்னிலையில் இவர் கடத்திச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும் திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளைவானில் வந்தோரால் 136 பேர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.