13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்தும்படி அரசாங்கத்தை இந் தியா வற்புறுத்தவில்லை. அது இந்தியா வால் வற்புறுத்தப்படவேண்டிய விடய மல்ல. இலங்கை இந்திய உடன்பாட்டின் ஓர் அம்சம் இது என்பதை எல்லோருமே அறி வார்கள். இந்தச் செயற்பாட்டில் இந்தியா அதிகமாக ஈடுபட்டிருந்தது. ஆனால் இப் பொழுது அதுவல்ல நிலைமை.
இவ்வாறு கூறியிருக்கிறார் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் சகோதரரு மான பஸில் ராஜபக்ஷ. லக்பிம ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் அவர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:கிழக்கில் பலவருட புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஜனநாயகத்தில் பங்கு ஏற்கவேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம். முல்லைத்தீவு கிளிநொச்சியைத் தவிர ஏனைய பகுதிகளில் மக்கள் அனுபவிக்கும் ஜனநாயகத்தைக் கிழக்கு மக்களும் அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்.சர்வதேச சமூகம் இன்றி வாழ முடியும் என்று அரசாங்கம் நினைக்கவில்லை. ஆனால் அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக ஜனாதிபதி எதனையும் செய்ய வில்லை. ஆனால் அவர்கள் ஜனநாயகம் நாட்டில் நிலைபெறுவதை விரும்பும் எமது நண்பர்கள். அதனால் அவர்கள் திருப்தியடையவே செய்வார்கள்.
நாங்கள் இப்பொழுது செய்வது குறித்து ஜே.வி.பி.எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று நான் நினைக்கவில்லை. கிழக்கு விடுவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தும்படி அவர்கள் கேட்டார்கள். ஏனைய மாகாண சபைகளில் ஜே.வி.பி.பிரதிகள் இருக்கிறார்கள். கிழக்கில் தேர்தல் நடத்தினால் அவர்களும் போட்டியிடுவார்கள் என்று நினைக் கின்றேன். ஒரு கொள்கை என்ற முறையில் 13 ஆவது திருத்தத்தை அவர்கள் எதிர்க் கிறார்கள்.
ஒரு சமயம் எஸ்.எல்.பியும் அதனை எதிர்த்ததுண்டு. துரதிஷ்டவசமாக மாகாண சபைத் திட்டம் வடக்கு, கிழக்கில் 20 வருடங்களுக்கு மேல் செயற்படவில்லை. ஏனைய பகுதி மக்கள் அதனைக் கேட்க வில்லை. ஆனால் அனுபவிக்கிறார்கள். அதனால் தான் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு அதனை முன் மொழிந்துள்ளது. தேர்தலை நடத்தும்படி கேட்டுள்ளது. தேர்தலைக் கிழக்கில் நிறுத்திவைப்பதற்கு நியாயம் எதுவும் இல்லை. இது ஜனநாய கத்தை நிலை நாட்டுவதாகும்.
வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களுக்கான திகதி குறிக்கப்படவில்லை. இந்தத் தேர்தல் முடிந்த கையோடு அது நடக்கலாம். அது தேர்தல் ஆணையாளரின் கையில் உள்ளது.
குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகார பதவிகள்
அரசின் அதிகாரப் பதவிகளையெல்லாம் ராஜபக்ஷ குடும்பமே கைப்பற்றி வைத்துக்கொண்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்களின் குற்றச் சாட்டுகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
எந்த ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையிலும் சொந்தக்காரர்களையே வைத்திருக்கவேண்டும். அமெரிக்காவி லும் இது இடம்பெறுகின்றது. கென்னடி குடும்பம் மற்றும் எல்லாவற்றிலும், கியூபா, வட கொரியா போன்ற கம்யூனிஸ் நாடுகளிலும் இது இடம்பெறுகின்றது. ஜனாதிபதி தமக்கு விசுவாசமாக உள்ள நம்பிக்கையான, திறமையான ஆள்களைத் தெரிவு செய்துள்ளார் என்று நினைக்கிறேன்.
கே. அரசமைப்பு சபையை ஏன் ஜனாதி பதி நியமிக்காமல் இருக்கிறார்?
எனக்குத் தெரியவில்லை. அரசமைப்பு சபை என்பதில் எனக்கு விருப்பமில்லை. அது மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க வில்லை. உதாரணமாக 51 வீத வாக்குகளைப் பெறும் ஒருவரால் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும். ஆனால் 3 வீத வாக்குகளைப் பெறும் ஒரு கட்சியும் ஒரு உறுப்பினரைத் தெரிவு செய்யலாம். இவர்கள் அனைவரும் அரசியல்கட்சி நியமனங்களே. எனவே இவர்களைச் சார்பற்றவர்கள் என்று எப்படிக் கூறமுடியும்? அத்துடன் அச் சபை எவருக்கும் பொறுப்புக் கூற வேண்டியதும் இல்லை. ஜனநாயகத்தில் அரசியல்வாதிகள் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். நிறைவேற்று அதிகாரம் நீதி மன்றத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டும். நீதித்துறைச் சட்டங்களால் கட்டுப்படுத் தப்படுகின்றது. அரசமைப்புச் சபையைப் பொறுத்தவரை கட்டுப்பாடே கிடையாது.ஆரம்பத்தில் ஆணைக்குழுக்கள் மேற் பார்வை அமைப்புகளாகவே இருந்தன. இப் பொழுது அவை நிர்வாக அமைப்புகளாகி விட்டன. தனிப்பட்ட முறையில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத பல அம்சங்கள் இருக்கின்றன. இருந்தும் இது அரசமைப் பின் ஒரு பகுதியாகும். அரசமைப்பை நாம் கௌரவித்தாக வேண்டும். ரணில் விக்கிரம சிங்க தங்கள் உறுப்பினரை நியமிக்க ஒரு வருடம் எடுத்துக்கொண்டார். சிறிய கட்சிகள் இரண்டு வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டன. ஆனால் ஜனாதிபதி அதனை சிலவாரங்களில் அல்லது நாள்களில் நிறை வேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஏன் அப்படி? அவருக்கும் கால அவகாசம் தேவை. தீர்மானிப்பதற்கு அவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும். அது ஆபத் தான நியமனம். எதுவானாலும் நியமனம் செய்வதற்கென்று நேர அட்டவணை ஏதும் கிடையாது.
கிழக்கில் நிலைமை மேம்பட்டுள்ளது