அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையிலுள்ள 19 வைத்தியசாலைகளுக்கு 1,120 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் வேண்டுகோளிற்கு அமையவே இந் நடடிக்கையினை சுகதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இவ் உபகரணங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை,குருநாகல் கராப்பிட்டிய வைத்தியசாலை,ராகம களுபோவெல வைத்தியசாலை,பேராதனை, கண்டி இரத்தினப்புரி, மட்டக்களப்பு.அநுராதப்புரம்,பதுளை, கேகாலை வெலிசர,நுவரெலியா,கந்தளை,கம்பளை மாரகம் புற்றுநோய் வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.இதற்கென ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு , இவ் உபகரணங்கள் இவ்வருட இறுதிக்குள் கிடைக்கப்பெறுவதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது