இலங்கையின் தேசிய அபிவிருத்தி திட்டங்களிற்க்காக ஜப்பானிய அரசு 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான் நிதியுதவியை வழங்கவுள்ளது.
இந் நிதி மோதல்களினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களின் ஜீவனோபாய அபிவிருத்தி திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது.இது தொடர்பாக விளக்கமளிக்கும் மாநாடொன்று இன்று கொழும்பில் தேசிய கட்டிடநிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் திணைக்களத்தில் நடைப்பெற்றது.
இதில் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் சியோசி அராகி ,தேசிய அபிவிருத்தி திட்டத்திற்க்கான முகமையாளர் டக்லஸ் கே மற்றும் தேசிய கட்டிடநிர்மாண மற்றும் தோட்ட அமைச்சின் செயலாளர் டபிள்யூ.கே.கே குமரசிறி அரசாங்க சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ் ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந் நிதி தேசிய அபிவிருத்தி திட்டத்தினூடாக குறைந்த பட்சம் 100,000 மக்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந் நிதி மீன்பிடி,விவசாயம், சிறுகைதொழில்,பண்ணை தொழில் ஆகிய ஜீவனோபாய தொழிலில் ஈடுப்படுவோரின் அபிவிருத்திற்கு வழங்கபடவுள்ளன. இதற்கான பூரண உதவி ஜப்பானிய அரசாங்கம் வழங்கவுள்ளது. இந்த ஜீவனோபாய அபிவிருத்தி திட்டத்தினூடாக பலர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் மாநாட்டில் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் சியோசி அராகி கருத்து தெரிவிக்கும் போது. இந்த அபிவிருத்தி திட்டம் வடக்கு கிழக்கில் நேரடியாக மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஜீவனோபாய தரத்தை உயர்த்துவதோடு ,இடம்பெயர்ந்து வாழும் மக்களையும் அவர்களின் சோந்த இடங்களில் மீள் குடியேற்றவும் உதவும் என .ஜப்பானின் தூதுவர் சியோசி அராகி மேலும் தெரிவித்தார்.,