இலங்கையுடனான எமது உறவில், அங்கு வாழும் தமிழ்மக்களது நலன்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன.இதனை மனதில் கொண்டே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்நடத்தத் தீர்மானித்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளதை முன்னேற்றகரமான முதல் நடவடிக்கையென நாம்வர வேற்கிறோம்.
இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையுடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து உரையாற்றுகையில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இவ்வாறு தெரிவித்தார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:இலங்கையில் உருவாகி வரும் நிலைவரம் குறித்து இந்தியா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. அங்கு சமீபத்தில் வன்முறையும் மோதலும் அதிகரித்துள்ளமை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.இலங்கையின் நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இலங்கை தொடர்பான எமது கொள்கை அமைந்துள்ளது என்பது எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியும்.
தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள், பேச்சு மூலமாகக் காண்பதே ஒரேயொரு முன்னேற்றகரமான வழியாகும். இலங்கையுடனான எமது உறவில் அங்கு வாழும் தமிழ் மக்களது நலன்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன.
இதனை மனதில் கொண்டே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை தீர்மானித்துள்ளதாக அறிவித்ததை முன்னேற்றகரமான முதல் நடவடிக்கையென நாம் வரவேற்றோம்.
இந்திய மீனவர் விடயம்இந்தியா தனது மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து முழுமையான அக்கறை கொண்டுள்ளது.
இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை மதிக்க வேண்டியது அவசியம். அதேவேளை, எமது மீனவர்கள் விடயத்தில் பொறுமையுடனும், மனிதாபிமானதுடனும் நடந்து கொள்ளுமாறு இலங்கைக் கடற்படையைக் கேட்டுள்ளோம் என்றார்.