முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் மரப் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 71 பங்களாதேஷ் மற்றும் மியன்மார் பிரஜைகளை சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்காக அந்த நாடுகளின் தூதரகங்களிடம் கையளிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டரீதியான செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் தூதரகங்களுக்கு இவர்கள் கையளிக்கப்படவுள்ளனர்.
மலேசியாவிலும் தாய்லாந்திலும் சட்டவிரோதமாக் குடியேறும் நோக்கில் 15 மீட்டர் நீளமான மரப்; படகொன்றில் பிரயாணம் செய்த 50 மியன்மார் வாசிகளும் பங்களாதேஷ் பிரஜைகள் 21 பேரும் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை கடற்படையினரால் நேற்று காப்பாற்றப்பட்டனர்.
திருகோணமலைத் துறைமுகத்தில் இவர்களுக்கு உணவும் மருத்துவ சிகிச்சைகளும் அளி;க்கப்பட்டுவருகின்றமை குறிபபிடத்தக்கது.