மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தட்சணாமருதமடுப் பகுதியில் தமது வீடுகளை பார்வையிட உழவூர்தியில் சென்றவர்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 4 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பெரியமடுவுக்கும் பாலம்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள மயிலடிவில்லுப் பகுதியிலேயே இக்கிளைமோர்த் தாக்குதல் இடம்பெற்றது.