வடக்கு போர் முனைகளிலும் மன்னார் களமுனைகளிலும் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 19க்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 80க்கு மேற்பட்ட படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார்
மன்னார் பண்டிவிரிச்சான்,முள்ளிக்குளம்,பாலைக்குழு ஆகிய பிரதேசங்களில் கடந்த 1ஆம் 2ஆம் திகதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் 10க்கும் மேற்ப்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 40க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு போர் முனை
இதேபோன்று வடக்கு போர் முனைகளில் கடந்த சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கை காரணமாக 9பேர் கொல்லப்பட்டதுடன் 39பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.